கால்ஆழ் களரில் நரிஅடும் – குறள்: 500

Thiruvalluvar

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு.
– குறள்: 500

அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள்கலைஞர் உரை

வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை,
சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பாகர்க்கும் யானை மறவர்க்கும் அடங்காதனவாய்ப் போர்க்களத்தில் வேன்மறவரைக் கோட்டாற் குத்திக்கோத்த மதயானைகளையும் ; அவை காலமிழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட விடத்து மிகச் சிறிய நரிகளும் அவற்றைக் கொன்று விடும் .மு. வரதராசனார் உரை

வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.G.U. Pope’s Translation

The jackal slays, in miry paths of foot – betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men.

 – Thirukkural: 500, Knowing the Place, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.