இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று – குறள்: 627

Thiruvalluvar

இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். – குறள்: 627

– அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள்



கலைஞர் உரை

துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை
உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

மேலோர்; இவ்வுலகத்தில் இருதிணை யுயிரோடு கூடிய உடம்புகளும் துன்பம் என்னும் வேலுக்கு இலக்கென்று தெளிந்து; தமக்குத் துன்பம் வந்த விடத்து மனங்கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளார்.



மு. வரதராசனார் உரை

மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.



G.U. Pope’s Translation

Mans’ frame is sorrow’s target, ‘ the noble mind reflects, Nor meets with troubled mind and the sorrows it expects.

 – Thirukkural: 627, Hopefulness in Trouble, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.