எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ – குறள்: 1004

Thiruvalluvar

எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
குறள்: 1004

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி
நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ?



மு. வரதராசனார் உரை

பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?



G.U. Pope’s Translation

Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray?

 – Thirukkural: 1004, Wealth without Benefaction, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.