
நீர்க்குமிழி – குழந்தைப் பாடல்கள் – பாடலாசிரியர் உதயநிதி நடராஜன்
சோப்பு நீரில் நீர்க்குமிழி
ஊதி நானும் செய்தேனே
காற்றில் மிதந்து செல்லுதே
காற்றைத் தாங்கிச் செல்லுதே
வண்ணம் பல மாறுதே
உருண்டை வானவில் தேயுதே
மேலே மேலே செல்லுதே
உடைந்தால் கூட மகிழ்வேனே
மீண்டும் ஊதி மகிழ்வேனே !

Be the first to comment