
உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல். – குறள்: 743
– அதிகாரம்: அரண், பால்: பொருள்
கலைஞர் உரை
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
உயர்ச்சியும் அகலமும் திணுக்கமும் அருமையும்; ஆகிய இந்நான்கு திறமும் அமைந்திருப்பதே; சிறந்த மதிலரண் என்று அரசியல் பற்றிய பொருள்நூல் கூறும்.
மு. வரதராசனார் உரை
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
G.U. Pope’s Translation
Height, breadth, strength, difficult access;
Science declares a fort must these possess.
– Thirukkural: 743, The Fortification, Wealth

Be the first to comment