கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன்

கடல் உலகம்

கடல் உலகம் – குழந்தைப் பாடல் – எழுதியவர்: உதயநிதி நடராஜன

கடலம்மா கடலம்மா
அழகோ அழகம்மா

உன்னில்உள்ள உயிர்களோ
கோடி கோடியம்மா

கடற்பஞ்சு கடற்குதிரை
வண்ண மீன்களம்மா

திமிங்கலமும் சுறாவும்
பல்லைக் காட்டுதம்மா

சீலோடு ஆமையம்மா
கரையைக் கடக்குதம்மா

பெங்குவினும் குதித்துத்தான்
பனிமலையில் சறுக்குதம்மா

ஆக்டோபஸ் நண்டுப்பிடியோ
பயமோ பயமம்மா

கடற்சிங்கம் கடற்பறவை
வந்து போகுதம்மா

நட்சத்திர மீன்மிதப்பதுதான்
வானின் காட்சியம்மா

சீலோடு டால்பினும்
கையைக் குலுக்குதம்மா

அன்போடு அரவணைக்க
இங்குநெகிழி வேண்டாம்மா

கடலோடு நச்சைக்கலக்க
உயிர்கள் கலங்குதம்மா

இயற்கையை காத்துதான்
உயிரை காப்போம்மா

கடற்பயணம் முடிந்து வீட்டுக்கு வந்தால்
கண்களோ மீன் தொட்டியில்லம்மா….



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.