வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை – குறள்: 512

Thiruvalluvar

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
– குறள்: 512

– அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருள் வருவாய்களை விரிவாக்கியும் பல்குவித்தும் பெருகச் செய்து ; அவற்றாற் செல்வத்தை வளர்த்து ; அவற்றிற்கு நேர்ந்த இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவனே ; அரசனுக்குத் தலைமை யமைச்சனாக விருந்து பணியாற்றுக.



மு. வரதராசனார் உரை

பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.



G.U. Pope’s Translation

Who swells the revenues, spreads plenty o’er the land, Seeks out what hinders progress, his the workman’s hand.

 – Thirukkural: 512, Selection and Employment, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.