தினைத்துணையாம் குற்றம் வரினும் – குறள்: 433

Thiruvalluvar

தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
– குறள்: 433

அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள்



கலைஞர் உரை

பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பழிக்கு அஞ்சுவார்; தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர்.



மு. வரதராசனார் உரை

பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும், அதைப் பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக்கொள்வர்.



G.U. Pope’s Translation

Though small as millet’seed the fault men deem;
As palm-tree vast to those who fear disgrace ’twill seem.

 – Thirukkural: 433, The Correction of Faults , Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.