பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் – குறள்: 913

Thiruvalluvar

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்
ஏதில் பிணம்தழீஇ யற்று.
குறள்: 913

– அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள்.



கலைஞர் உரை

விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பொருள் கொடுப்பாரை விரும்பாது அவர் கொடுக்கும் பொருளையே விரும்பும் விலைமகளிரின் பொய்யான தழுவல்; கூலிக்கு அமர்த்தப்பட்டவன் இருட்டறையில் யாதொரு தொடர்புமில்லாத கன்னிப் பெண்ணின் பிணவுடம்பைப் பொருளாசை கருதித் தழுவினாற் போலும்.



மு. வரதராசனார் உரை

பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.



G.U. Pope’s Translation

As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women’s charms.

Thirukkural: 913, Wanton Women, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.