பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் – குறள்: 1000

Thiruvalluvar

பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று.
குறள்: 1000

– அதிகாரம்: பண்புடைமை, பால்: பொருள்கலைஞர் உரை

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பண்பில்லாதவன் பழம் பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாக அடைந்த பெருஞ்செல்வம், ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நல்ல ஆவின்பால் வார்த்த கலத்தின் குற்றத்தாற் களிம்பேறிக் கெட்டாற்போலும்.மு. வரதராசனார் உரை

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.G.U. Pope’s Translation

Like sweet milk soured because in filthy vessel poured, Is ample wealth in churlish man’s unopened coffers stored.

 – Thirukkural: 1000, Perfectness, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.