
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு. – குறள்: 454
– அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள்
கலைஞர் உரை
ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல்
தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால்
வெளிப்படுவதேயாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
மேற்கூறிய சிறப்பறிவு; ஒருவனுக்கு அவன் மனத்தின் கண்ணேயுள தாவதுபோல் தன்னைத் தோற்றுவித்து; உண்மையில் அவன் சேர்ந்த இனத்தின் கண்ணே உண்டாவதாம்.
மு. வரதராசனார் உரை
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.
G.U. Pope’s Translation
Man’s wisdom seems the offspring of his mind; ‘Tis outcome of companionship we find.
– Thirukkural: 454, Avoiding mean Associations, Wealth

		
		
		
Be the first to comment