முருங்கைக் கீரைத் துவையல் – செய்முறை – மகளிர்ப் பகுதி

முருங்கைக் கீரைத் துவையல்

முருங்கைக் கீரைத் துவையல் – சமையல் பகுதி – Drumstick Leaves Thick Chutney

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை = ஒரு கைப்பிடி அளவு
  • கடலைப் பருப்பு = 3 மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் = 3
  • புளி = ஒரு சுளை
  • பூண்டு = 2 பற்கள்
  • துவரம்பருப்பு  = 1 மேசைக்கரண்டி
  • எண்ணெய் = 2 மேசைக்கரண்டி (கீரை வதக்குவதற்காக)
  • தேவைக்கேற்ப உப்பு.


செய்முறை

  1. முதலில் முருங்கைக் கீரையை உருவி 1/2 மணி நேரம் ஒரு தட்டில் உலர வைக்கவும்.
  2. பின் அடுப்பை பற்றவைத்து எண்ணெய் ஊற்றி, அடுப்பை மெதுவாக எரியவிடவும்.
  3. பின் முருங்கைக் கீரை, துவரம்பருப்பு , மிளகாய் மற்றும்  கடலைப்பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக எண்ணெயில் போட்டு கருகிவிடாதபடி நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  4. சிறிது நேரம் ஆறவைத்த பின் அவற்றை மின் அரைவை எந்திரத்தில் (மிக்ஸியில்) போட்டு அதனுடன் புளி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
முருங்கைக்கீரைத் துவையல்

இப்போது சுவையான, சத்து மிக்க முருங்கைக்கீரைத் துவையல் தயார்.



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.