இளநிலை அறிவியல் பயிலும் மாணவிகளுக்கான சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship for Women in BSc Degree Courses

Sashakt Scholarship for Women in BSc

சஷாக்த் கல்வி உதவித்தொகை – Sashakt Scholarship

டாக்டர் ரெட்டி அமைப்பு (Dr. Reddy’s Foundation), இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு சஷாக்த் கல்வி (Sashakt Scholarship for Women in BSc) உதவித்தொகை ரூ. 2,40,000 வழங்குகிறது. குடும்ப வருமானம் ரூபாய் ஐந்து லட்சத்துக்குக் (ரூ. 5,00,000) குறைவான நிதி நிலையில் உள்ள, +2 படிப்பு முடித்து முதலாண்டு முழு அறிவியலில் (Pure / Natural Science) இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் (B.Sc Degree Course) சேரும் மாணவிகள் இந்த உதவித்தொகையைப் பெற்று பயனடையலாம்.

ஆண்டுக்கு ரூ. 80,000 வீதம், மூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 2,40,000 கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மாணவிகளுக்கு பட்டப் படிப்பு பயில மூன்று ஆண்டுகளுக்கும் தேவையான கல்விக்கட்டணம், படிப்பு செலவு, மற்றும் அன்றாட செலவுகள் ஆகியவற்றுக்குப் போதுமானதாக இருக்கும்.

பெண் விஞ்ஞானிகளை உருவாக்கும் பொருட்டும், பெண்கள் அறிவியல் பட்டப்படிப்பில் சேருவதை ஊக்குவிப்பதற்காகவும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் சிறந்த அறிவியல் கல்வி பெற வழி வகுப்பதற்காகவும், இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகை, பெறுவதுடன், நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் உள்ள பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையும் பட்டப்படிப்பு பயிலும் மூன்று ஆண்டுகளுக்கும் மாணவிகளுக்குக் கிடைக்கும்.

இந்தக் கல்வித்தொகை பன்னிரெண்டாம் வகுப்பில் (+2) அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும், மாணவிகளின் குடும்ப வருமானம் ரூ. 5,00,000 -க்கு (ரூபாய் ஐந்து லட்சம்) குறைவாக இருக்க வேண்டும். குறிப்பாக, கிராமப்புற மாணவிகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவிகள், மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் நாட்டம் உள்ள மாணவிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த உதவித்தொகை இந்தியாவின் பல நகரங்களிலும் உள்ள கீழ்க்கண்ட கல்லூரிகளில் இளநிலை அறிவியல் பட்டப் படிப்புக்கான முதலாண்டு அனுமதி பெறும் மாணவிகளுக்கு வழங்கப்படும்:

  • மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி, சென்னை – Madras Christian College, Chennai
  • ஸ்டெல்லா மேரிக் கல்லூரி, சென்னை – Stella Maris College, Chennai
  • பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரி, சென்னை – Women’s Christian College, Chennai
  • கிறிஸ்துப் பல்கலைக்கழகம், பெங்களூர் – Christ University, Bangalore
  • மவுண்ட் கார்மெல் கல்லூரி, பெங்களூர் – Mount Carmel College, Bangalore
  • செயின்ட். ஜோசெப் கல்லூரி, பெங்களூர் – St Joseph’s College, Bangalore
  • ஆக்ஸ்ஃபோர்ட் அறிவியல் கல்லூரி, பெங்களூர் – The Oxford College of Science, Bangalore
  • செயின்ட் ஃபிரான்ஸிஸ் பெண்கள் பட்டப் படிப்புக் கல்லூரி, ஹைதராபாத் – St. Francis Degree College for Women, Hyderabad
  • செயின்ட் ஆன்ன் பெண்கள் கல்லூரி, ஹைதராபாத் – St. Ann’s College for Women, Hyderabad
  • மிராண்டா ஹவுஸ், டெல்லி – Miranda House, Delhi
  • இந்துக் கல்லூரி, டெல்லி – Hindu College, Delhi
  • செயின்ட் ஸ்டீபன் கல்லூரி, டெல்லி – St. Stephen’s College, Delhi
  • கிரோரி மால் கல்லூரி, டெல்லி – Kirori Mal College, Delhi
  • ஹன்ஸ்ராஜ் கல்லூரி, டெல்லி – Hansraj College, Delhi
  • ஏ.ஆர்.எஸ்.டி. கல்லூரி, டெல்லி – ARSD College, Delhi
  • கர்கி கல்லூரி, டெல்லி – Gargi College, Delhi
  • விவேகானந்தா கல்லூரி, மத்தியம்கிராம், கோல்கத்தா – Kolkata Vivekananda College, Madhyamgram
  • மித்திபாய் கல்லூரி, மும்பாய் – Mithibai College, Mumbai
  • செயின்ட் சேவியர் கல்லூரி, மும்பாய் – St Xavier’s College, Mumbai
  • சோஃபியா பெண்கள் கல்லூரி, மும்பாய் – Sophia College for Women, Mumbai

மாணவிகள் இந்த கல்வி உதவித் தொகையைப் பெற, விண்ணப்பத்தை இணைய வழியில் பதிவு செய்து, மேற்கண்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் கல்லூரி சேர்க்கைக்கான ஏற்புக் (Admission Offer) கடிதத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான இறுதித் தேதி 31-ஜூலை-2019. மேலும் விவரங்களுக்கு, டாக்டர் ரெட்டி அமைப்பின் (Dr. Reddy’s Foundation) சஷாக்த் கல்வி உதவித்தொகை (Sashakt Scholarship) இணையதளத்தைப் பார்க்கவும்:

டாக்டர் ரெட்டி அமைப்பின் (Dr. Reddy’s Foundation) சஷாக்த் கல்வி உதவித்தொகை (Sashakt Scholarship)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.