கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் – குறள்: 894

Thiruvalluvar

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
குறள்: 894

– அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை, பால்: பொருள்.



கலைஞர் உரை

எந்தத் துன்பத்தையும் தாங்கக் கூடிய ஆற்றல் படைத்தவர்களுடன்,
சிறு துன்பத்தையும் தாங்க முடியாதவர்கள் மோதினால் அவர்களே
தங்களின் முடிவுகாலத்தைக் கையசைத்துக் கூப்பிடுகிறார்கள் என்று தான் பொருள்.

.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம் கருதியதை உடனே முடிக்கும் ஆற்றலுடைய பெரியார்க்கு, அஃதில்லாத சிறியார் தாம் முற்பட்டுத் தீமை செய்தல்; குறித்த காலத்தில் தானே தப்பாது வரக்கடவனாகிய கூற்றுவனை, அதற்கு முன்பே வலியக் கைதட்டி அழைத்தாற்போலும்.



மு. வரதராசனார் உரை

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தால், தானே வந்து அழிக்கவல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.



G.U. Pope’s Translation

When powerless men ‘gainst men of power will evil deeds essay,
‘Tis beck’ning with the hand for Death to seize them for its prey.

Thirukkural: 894, Not Offending the Great, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.