
முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி
தேவையான பொருட்கள்
- முருங்கைக்காய் = 3 பிஞ்சு
 - பச்சை மிளகாய் = 2
 - பூண்டு = 4 பற்கள்
 - வெங்காயம் = 1
 - சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி
 - மஞ்சள் தூள் = ஒரு சிட்டிகை
 - தனியாத் தூள் = ஒரு மேசைக்கரண்டி
 - தேங்காய்த் துண்டு = 3 சிறியது
 - எலுமிச்சை சாறு = 5 சொட்டு
 - கொத்தமல்லித் தழை = சிறிது
 - சோம்பு = சிறிது
 - உப்பு = தேவைக்கேற்ப
 
செய்முறை
- வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் அரிந்து கொள்ளவும்.
 - தேங்காயையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து வைக்கவும்.
 - முருங்கைக்காயை சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
 - பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, அரிந்து வைத்த காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
 - முருங்கைக்காய் கொஞ்சம் வெந்தவுடன், சீரகத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவற்றுடன் அரைத்த தேங்காயைச் சேர்த்து, வெந்து கொண்டிருக்கும் காயில் போட்டு கிளறிவிடவும்.
 - அதனுடன் சோம்பையும், கறிவேப்பிலையையும் போடவும்.
 - இறக்கி வைக்கும் போது எலுமிச்சை சாறையும் மல்லித் தழையையும் போட்டு சரிபார்த்து இறக்கி வைக்கவும்.
 
இப்போது சூடான மற்றும் சுவையான முருங்கைக்காய் சூப் தயார். இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

		
		
		
Be the first to comment