Thiruvalluvar
திருக்குறள்

எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு – குறள்: 910

எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். – குறள்: 910 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள்காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை வினைச் சூழ்ச்சித் திறனுடைய உள்ளத்தையும் அதனாலுண்டான செல்வத்தையும் உடையவர்க்கு; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்பின் விழையார் பொருள்விழையும் – குறள்: 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். – குறள்: 911 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் – குறள்: 912

பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல். – குறள்: 912 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகு மொழிபேசும்பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனிடமிருந்து பெறக்கூடிய பொருளின் அளவை ஆராய்ந்தறிந்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் – குறள்: 913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டுஅறையில்ஏதில் பிணம்தழீஇ யற்று. – குறள்: 913 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது, இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொருட்பொருளார் புன்நலம் தோயார் – குறள்: 914

பொருட்பொருளார் புன்நலம் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர். – குறள்: 914 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளைமட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக்கருதுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து ஈட்டும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொதுநலத்தார் புன்நலம் தோயார் – குறள்: 915

பொதுநலத்தார் புன்நலம் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர். – குறள்: 915 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள்பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இயற்கையான மதி நுட்பத்தால் மாட்சிமைப்பட்ட செயற்கையான கல்வியறிவினையுடையார்; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தம்நலம் பாரிப்பார் தோயார் – குறள்: 916

தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிபுன்நலம் பாரிப்பார் தோள். – குறள்: 916 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியறிவாலும் நற்குணநற் செய்கையாலும் தம் புகழை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் – குறள்: 917

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்பேணி புணர்பவர் தோள். – குறள்: 917 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு – குறள்: 918

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்பமாய மகளிர் முயக்கு. – குறள்: 918 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தி யிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அழகு , [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் – குறள்: 919

வரைவுஇலா மாண்இழையார் மென்தோள் புரைஇலாப்பூரியர்கள் ஆழும் அளறு. – குறள்: 919 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச்சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் [ மேலும் படிக்க …]