இலக்கணக் குறிப்பு வினாடி வினா – 1 – பள்ளி மாணவர்கள், டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்கள், மற்றும் போட்டித்தேர்வுகள் எழுதுவோர்க்கு
இதில் மொத்தம் 10 இலக்கணக் குறிப்புக் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை பள்ளி மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி (TNPSC), யுபிஎஸ்சி(UPSC) போட்டித் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள் மற்றும் தமிழ் இலக்கணத்தில் ஆர்வம் உடையவர்கள் முயற்சி செய்யலாம்.
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்ஒன்னார் விழையும் சிறப்பு. – குறள்: 630 – அதிகாரம்: இடுக்கண் அழியாமை, பால்: பொருள் கலைஞர் உரை துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு,அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் [ மேலும் படிக்க …]
பெரிதுஇனிது பேதையார் கேண்மை பிரிவின்கண்பீழை தருவதுஒன்று இல். – குறள்: 839 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது;ஏனென்றால் அவர்களிடமிருந்து பிரியும்போது எந்தத் துன்பமும்ஏற்படுவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; [ மேலும் படிக்க …]
கூறாமை நோக்கி குறிப்புஅறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக்கு அணி. – குறள்: 701 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அரசன் கருதிய கருமத்தை [ மேலும் படிக்க …]
Be the first to comment