
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறம்கூர்ந் தனையது உடைத்து. – குறள்: 1010
– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்
கலைஞர் உரை
சிறந்த உள்ளம் கொண்ட செல்வர்களுக்கேற்படும் சிறிதளவு வறுமையின் நிழல்கூட, மழை பொய்த்து விட்டதற்கு ஒப்பானதாகும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
ஈகையாற் புகழ்பெற்ற செல்வர் குறுங்கால வறுமை யடைதல்; உலகத்தை வழங்கிவரச் செய்வதாகிய முகில் (மேகம்) சிற்றிடைக்காலம் பெய்யாது வறட்சி மிகுந்தாற்போன்ற தன்மை யுடையது.
மு. வரதராசனார் உரை
புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.
G.U. Pope’s Translation
‘Tis as when rain-cloud in the heaven grows dry, When generous wealthy man endures brief poverty.
– Thirukkural: 1010, Wealth without Benefaction, Wealth

Be the first to comment