கரவாது உவந்துஈயும் கண்அன்னார் – குறள்: 1061

Thiruvalluvar

கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். – குறள்: 1061

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச் சிந்தையுடையவரிடம் கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தம்மிட முள்ளதை ஒளிக்காது, அரும்பெறலுறவினர் வந்தாரேயென்று அகமகிழ்ந்து கொடுக்குங் கண்போலச் சிறந்தாரிடத்தும் இரவாது வறுமை கூர்ந்திறத்தல்; அவரிடம் இரந்து நுகர்ச்சிப் பொருளும் செல்வமும் பெறுவதினும் கோடி மடங்கு நன்றாம்.



மு. வரதராசனார் உரை

உள்ளதை ஒளிக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லது.



G.U. Pope’s Translation

Ten million-fold ’tis greater gain, asking no alms to live, Even from those, like eyes in worth, who nought concealing gladly give.

 – Thirukkural: 1061, The Dread of Mendicancy, Wealth



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.