கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் – குறள்: 575

Thiruvalluvar

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண் என்று உணரப்படும்.
– குறள்: 575

– அதிகாரம்: கண்ணோட்டம், பால்: பொருள்கலைஞர் உரை

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர் கண்ணிற்கு அணிகலம் போல் அழகு செய்வது கண்ணோட்டமே; அவ்வணிகலமின்றேல் அது அறிவுடையோராற் புண்ணென்றே கருதப்படும்.மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.G.U. Pope’s Translation

Benignity is eyes ‘ adorning grace;
Without it eyes’ are wounds disfiguring face.

 – Thirukkural: 575, Benignity, WealthBe the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.