இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் – குறள்: 940

Thiruvalluvar

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
குறள்: 940

– அதிகாரம்: சூது, பால்: பொருள்.



கலைஞர் உரை

பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின்மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பணையம் வைத்த பொருள்களை இழக்குந்தோறும் அவற்றை மீட்டற் பொருட்டும் மேற்கொண்டு ஈட்டற்பொருட்டும் சூதின் மேற்பற்று வைக்குஞ் சூதன்போன்றே; ஆதன்(ஆன்மா) உடம்பால் மூவழித் துன்பங்களையும் பட்டு வருந்துந்தோறும் அதன்மேற் பற்றுவைக்குந் தன்மையதாம்.



மு. வரதராசனார் உரை

பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.



G.U. Pope’s Translation

Howe’er he lose, the gambler’s heart is ever in the play;
E’en so the soul, despite its griefs, would live on earth alway.

Thirukkural: 940, Gambling, Wealth.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.