அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் – குறள்: 178

Thiruvalluvar

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
– குறள்: 178

– அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம்



கலைஞர் உரை

தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு வழி எதுவெனின்; அது பிறனுக்குத்தேவேயான அவனது கைப்பொருளைத்தான் விரும்பாமையாம்.



மு. வரதராசனார் உரை

ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்.



G.U. Pope’s Translation

What saves prosperity from swift decline?
Absence of lust to make another’s cherished riches thine!

 – Thirukkural: 178, Not Coveting, Virtues

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.