பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் தாபர் பொறியியல் கல்லூரியில் (TIET) முதுநிலை பொறியியல் பயிலும் மாணவிகளுக்கு புக்கிங்.காம் வழங்குகிறது

பெண்களுக்கான கல்வி உதவித்தொகை – Scholarship for Women

உலகின் மிகப் பெரிய மின்-வணிக பயண நிறுவனங்களில் ஒன்றான புக்கிங்.காம் (Booking.com), இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science, Bangalore – IISc) மற்றும் தாபர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் (Thapar Institute of Engineering and Technology, Patiala – TIET) ஆகிய கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை (Scholarship for Women) வழங்க இருக்கிறது.

உயர் தொழில்நுட்பப் பிரிவில் பெண்கள் முன்னேறுவதை ஊக்குவிப்பதற்காக, கடந்த சில வருடங்களாக உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நெதர்லாந்தின் புக்கிங்.காம் (Booking.com) நிறுவனம் கல்வி உதவித்தொகையை அளித்து வருகிறது. 2019-2020 கல்வி ஆண்டில், அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக் கழகம் (Cornell Unversity, Ithaca, New York), ஸ்பெல்மேன் கல்லூரி (Spelman College, Atlanta, Georgia) போன்ற நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் வரிசையில், இந்தியாவின் ஐ.ஐ.எஸ்ஸி, பெங்களூர் (IISc, Bangalore), மற்றும் டி.ஐ.இ.டி, பாட்டியாலா (TIET-Patiala) இணைந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டுகளில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகம் (Oxford University, UK) மற்றும், நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் (Delft University of Technology, Netherlands) ஆகிய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் கல்வி உதவி பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, ஐ.ஐ.எஸ்ஸி, பெங்களூர் (IISc, Bangalore), புக்கிங்.காம் (Booking.com) ஆகியவற்றின் இணைய முகவரியைப் பார்க்கவும்:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.