
கட்டெறும்பும் கட்டிக்கரும்பும் – குழந்தைப் பாடல்கள் – எழுதியவர் – ந. உதயநிதி
கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!

கட்டுக் கட்டா உடம்புடா
கட் டெறும்பு பேருடா
கட்டிக் கரும்பைக் கடிக்கும்டா
சாறு வரக் குடிக்கும்டா!
பசுவும் கன்றும் – குழந்தைப் பாடல்கள் – கவிமணி தேசிக விநாயகம் தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி. அம்மா என்குது வெள்ளைப் பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக் குட்டி நாவால் நக்குது வெள்ளைப் பசு – பாலை [ மேலும் படிக்க …]
கிழமை – பாரதிதாசன் கவிதை ஞாயிறுதான் ஒன்று-பின் நல்ல திங்கள் இரண்டு வாயிற் செவ்வாய் மூன்று-பின் வந்த புதன் நான்கு தூய்வியாழன் ஐந்து-பின் தோன்றும் வெள்ளி ஆறு சாயும்சனி ஏழு– இதைத் தவறாமற் கூறு.
மரம் ஏறலாம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பகுதி தென்னைமரத்தில் ஏறலாம்.தேங்காயைப் பறிக்கலாம். மாமரத்தில் ஏறலாம்.மாங்காயைப் பறிக்கலாம். புளியமரத்தில் ஏறலாம்.புளியங்காயைப் பறிக்கலாம். நெல்லிமரத்தில் ஏறலாம்.நெல்லிக்காயைப் பறிக்கலாம். வாழைமரத்தில் ஏறினால்,வழுக்கிவழுக்கி விழுகலாம்!
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment