பகுதி-2 – ப்ராசெசர், ரேம், ராம் – கைபேசி / ஸ்மார்ட் ஃபோன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

smartphones - 2

சென்ற பகுதியில் (பகுதி-1), புதிய கைபேசி / ஸ்மார்ட்ஃபோன் (Smartphone) வாங்கும் முன் கவனிக்க வேண்டியவற்றில் (Things to consider before buying / Tips for buying Smartphones) கைபேசிப் பயன்பாடு, ஓ.எஸ். (ஆப்பெரேட்டிங்க் சிஸ்டெம் – Operating System – O.S.) மற்றும் பேட்டெரியின் ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் (பகுதி-2 Part-2), கைபேசியின் மேலும் சில தொழில்நுட்பக் குறிப்புகள் (Technical Specifications of Smartphones)  பற்றிப் பார்ப்போம்.

 

    1. பல கோர் ப்ராசெசர் (மல்டி கோர் ப்ராசெசர் – Multi Core Processor) – பொதுவாக சந்தையில், 4 – கோர் (க்வாட் கோர் – Quad Core), 6 – கோர் (Hexa Core), 8 – கோர் (ஆக்ட கோர் – Octa Core) போன்ற பல கோர் ப்ராசெசர்கள் கொண்ட கைபேசிகள் கிடைக்கின்றன. நம்மை எப்படி நம் மூளை இயக்குகிறதோ, அதே போல் கைபேசியை (Smartphone) அதன் ப்ராசெசர் (Processor) இயக்குகிறது. பல கோர்கள் கொண்ட ஒரு ப்ராசெசர், பல விதமான வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டது. 2-கோர்கள் (Dual Core) மற்றும் 4-கோர்களை விட (Quad Core), 6-கோர்கள் (Hexa Core) கொண்ட ப்ராசெசர் வேகமாக செயல்படும். 6-கோர் ப்ராசெசரை விட 8-கோர் (Octa Core) ப்ராசெசர் அதிக வேகமாக வேலை செய்யும். இதனால் உங்கள் கைபேசி வேகமாக செயல்பட இயலும். உங்கள் தேவைக்கும், திட்டமிட்ட தொகைக்கும் ஏற்றவாறு, எந்த ப்ராசெசர் கொண்ட கைபேசி வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் ப்ராசெசரின் வேகத்தை நிர்ணயிக்கும் மற்றொறு முக்கிய காரணி GHz-ல் குறிப்பிடப்படும். பொதுவாக ப்ராசெசரின் வேகம் 1.7 GHz (கிகா ஹெர்ட்ஸ் – Giga Hertz) – க்கு மேல் இருந்தால் நல்லது.

 

  1. ரேம் மெமரி – தற்காலிக நினைவகம் (ரேம் மெமரி – RAM – Random Access Memory) – நாம் கைபேசியில் செயலிகளைப் (Apps) பயன்படுத்தும் போது, அவை தொடர்பான, தற்காலிகத் தகவல்கள் ரேம்-ல் (தற்காலிக நினைவகம்) தான் இருக்கும். ஒரே நேரத்தில், நாம் எத்தனை செயலிகளை பயன்படுத்துகிறோமோ அதற்கேற்ப, அதிக அளவில், நினைவறைகள் (மெமரி –   Memory), ரேம்-ல் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணத்திற்கு, ஃபோன் (Phone) ஒரு செயலி; தகவல் பெட்டி (Message Box) ஒரு செயலி; நாட்காட்டி (Calendar) ஒரு செயலி; கடிகாரம் (Clock), க்ரோம் போன்ற இணைய உலாவி (Internet Browsers such as Chrome) ஒரு செயலி; யூட்யூப் (Youtube) ஒரு செயலி; வாட்ஸ் ஆப், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களும் (Social Media like Whats App, Facebook) செயலிகளே. பொதுவாக, செயலிகளை நாம் நேரடியாக பயன்படுத்தாத போதும், பின்னால், அவை இயங்கிக்கொண்டும், ரேம்-ல் பெரும் இடத்தை எடுத்துக் கொண்டும் இருக்கும். செயலிகளின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தினால் (Deactivate) மட்டுமே, அவை தொடர்பான தகவல்கள் ரேம்-ல் இருந்து அழிக்கப்பட்டு, ரேம் மற்ற செயலிகளை இயக்குவதற்கு தக்கபடி, அதில் இடம் கிடைக்கும். கைபேசியின் ரேம்-ன் அளவு, GB-ல் (ஜிபி – கிகா பைட்ஸ் – Giga Bytes) குறிக்கப்பட்டு இருக்கும். உங்கள் தேவை அதிகரிக்கும் போது, அதாவது செயலிகளை அதிகம் பயன்படுத்துவதாக இருந்தால், அதற்கேற்ப, ரேம் (RAM) அளவு அதிகம் தேவைப்படும். சந்தையில், 2 GB, 3 GB, 4 GB, 6 GB (ஜிபி)… என்று ரேம் (RAM) அளவு குறிக்கப்பட்டு, கைபேசிகள் இருக்கும். நீங்கள் வாங்கும் கைபேசியின் (Smartphone) ரேம் குறைந்தது 2 GB – ஆவது இருக்க வேண்டும். உங்கள் பயன்பாட்டிற்கேற்ப, நீங்கள் அதிக  ஜிபி (GB) அளவுடைய ரேம் (RAM) கொண்ட கைபேசியைத் தேர்ந்தெடுக்கலாம்.

 

  1. நீண்ட கால / நிரந்தர / உள்ளிருக்கும் நினைவறை / மெமரி – ராம் – (In-built Storage / Internal Memory – ROM – Read Only Memory) – ராம் (ROM), அதாவது உள்ளிருக்கும் நிரந்தர / நீண்ட கால நினைவறையில் (மெமரி) தான் ஓ.எஸ்., மற்றும் அனைத்து செயலிகளும் நிறுவப்பட்டு (Installation of O.S. and Mobile Apps) இருக்கும். மேலும் உங்களுடைய கோப்புகள் / ஆவணங்கள், புகைப்படங்கள், இசைக் கோப்புகள் / வீடியோக்கள், ஆகியவை இதில் தான் சேமிக்கப்பட்டு / பதிக்கப்பட்டு இருக்கும் (Storage of all your files / documents, photos, music files, videos). இந்த மெமரியின் அளவு (ராம் / ROM), பொதுவாக 16 (GB), 32 ஜிபி (GB), 64 ஜிபி (GB) , 128 ஜிபி (GB) என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.  கைபேசியின் விலையை திட்டமிடப்பட்ட தொகைக்குள் கட்டுப்படுத்த வேண்டுமெனில், 32 ஜிபி அளவுக்கு ராம் (ROM) இருக்கும் கைபேசியை வாங்கலாம். பொதுவாக, இது போதுமானதாக இருக்கும். ஒருவேளை, அதிக அளவில், கோப்புகள் / ஆவணங்கள், புகைப்படங்கள் இசை / காணொளிக் கோப்புகள் போன்ற தகவல்கள் (Data) வைக்கும் தேவை உங்களுக்கு இருந்தால், 32 ஜிபி (GB) – க்கு மேல் ராம் மெமரி (ராம் / ROM) தேவைப்படலாம். அப்படியெனில்,64 ஜிபி (GB) , 128 ஜிபி (GB) ராம் (ROM) உள்ள கைபேசியை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதில், எஸ்.டி. அட்டை (எஸ்.டி கார்ட் – SD Card) எனப்படும், வெளிப்புற நினைவகம் (எக்ஸ்டெர்னல் மெமரி – External Memory) பொருத்தும் வசதி உள்ள கைபேசியை வாங்கி, உங்களுக்கு அதிக ராம் மெமரி (ROM) தேவைப்படும்போது, எஸ்.டி. அட்டை  வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

அடுத்த பகுதியில் (பகுதி-3), கைபேசி (Smartphone) வாங்கும் முன், சிந்திக்க வேண்டிய மேலும் பல தொழில்நுட்ப குறிப்புகள் பற்றிப் பார்ப்போம். (தொடரும்)…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.