
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. – குறள்: 408
– அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள்
கலைஞர் உரை
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும்
வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கல்லாதவரிடம் சேர்ந்த செல்வம்;கற்றவரிடம் சேர்ந்த வறுமையினும் தீயதேயாம்.
மு. வரதராசனார் உரை
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.
G.U. Pope’s Translation
To men unlearned, from fortune’s favour greater evil springs, Than proverty to men of goodly wisdom brings.
– Thirukkural: 408, Ignorance, Wealth

Be the first to comment