புறம்குன்றி கண்டனைய ரேனும் – குறள்: 277

புறம்குன்றி கண்டனைய ரேனும்

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி
மூக்கில் கரியார் உடைத்து. – குறள்: 277

– அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம்



கலைஞர் உரை

வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்,
குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வெளிக் கோலத்தில் குன்றிமணியின் பின்புறம் கண்டாற் போலச் செம்மை யுடையவரேனும்; உள்ளத்தில் அதன் மூக்குப்போல இருண்டிருப்பவரை உடையது இவ்வுலகம்.



மு. வரதராசனார் உரை

புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க் காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல் கருத்திருப்பவர் உலகில் உண்டு.



G.U. Pope’s Translation

Outward, they shine as ‘kunri’ berry’s scarlet bright; Inward, like tip of ‘kunri’ bead, as black as night.

 – Thirukkural: 277, Inconsistent Conduct, Virtues



Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.