குருவிரொட்டி இணைய இதழ்

தமிழ்நாடு வேளாண்மை இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் – 2019 – TNAU – UG Admissions 2019

இளநிலை அறிவியல் (ஹானர்ஸ்) – BSc (Hons), இளநிலைத் தொழில்நுட்பம் – BTech

தமிழ்நாடு வேளாண்மை 2019-ஆம் ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் இணைய வழியில் நடைபெறுகின்றன. இதற்கான அறிவிப்புகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் Tamil Nadu Agricultural University (TNAU – UG Admissions 2019) வெளியிட்டுள்ளது.

+2 படிப்பிற்குப் பிறகு, வேளாண்மை அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பான 4-ஆண்டு இளநிலைப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்கள் கீழே உள்ள படிப்புகளுக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பட்டப் படிப்புகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் 14 உறுப்பு மற்றும் 27 இணைப்புக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அதன் அதிகாரப் பூர்வ இணைய தள முகவரியில் இணை வழியில் 07-ஜூன்-2019 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், கல்வித் தகுதி, உறுப்பு (Constituent) மற்றும் இணைப்புக் (Affiliated) கல்லூரிகளின் பட்டியல், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை பல்கலைகழகத்தின் இந்த முகவரியில் அறியலாம்:

தமிழ்நாடு வேளாண்மப் பல்கலைக் கழகம் – இளநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கைகள் – Tamil Nadu Agiricultural University – TNAU – UG Admissions 2019