குருவிரொட்டி இணைய இதழ்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் – குறள்: 140

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
– குறள்: 140

– அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக்
கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயர்ந் தோரொடு பொருந்த வொழுகுதலைக் கல்லாதார் ; பல நூல்களைக் கற்றவரேனும் அறிவிலாதாரே .



மு. வரதராசனார் உரை

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.



G.U. Pope’s Translation

Who know not with the world in harmony to dwell, May many things have learned, but nothing well.

 – Thirukkural: 140, The Possession of Decorum, Virtues

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link