குருவிரொட்டி இணைய இதழ்

தூஉய்மை என்பது அவாஇன்மை – குறள்: 364


தூஉய்மை என்பது அவாஇன்மை மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும். – குறள்: 364

– அதிகாரம்: அவா அறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை
வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர்க்குத் தூயநிலைமையாகிய வீடென்று சொல்லப்படுவது அவாவில்லாமையாம், அவ்வவா வில்லாமை மெய்யான பரம்பொருளை வேண்டத்தானே வரும்.



மு. வரதராசனார் உரை

தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே யாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப் பொருளை விரும்புவதால் உண்டாகும்.



G.U. Pope’s Translation

Desire’s decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.

Thirukkural: 364, The Extirpation of Desire, Virtues