குருவிரொட்டி இணைய இதழ்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் – குறள்: 1065


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல். – குறள்: 1065

– அதிகாரம்: இரவு அச்சம், பால்: பொருள்



கலைஞர் உரை

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும் அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தெளிந்த நீர் போல் தெடுதெடுவென்றிருக்குமாறு சமைத்த கூழாயினும் ; தன் உழைப்பினால் வந்தவுணவை உண்ணுவதிலும் மிக இனியது ஒன்றுமில்லை,



மு. வரதராசனார் உரை

தெளிந்த நீர்போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.



G.U. Pope’s Translation

Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tastless as the water clear.

Thirukkural: 1065, The Dread of Mendicancy, Wealth