குருவிரொட்டி இணைய இதழ்

நெடுநீர் மறவி மடிதுயில் – குறள்: 605

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.   – குறள்: 605

            – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்

விளக்கம்:
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் சிறு படகாகும்.