குருவிரொட்டி இணைய இதழ்

மடியை மடியா ஒழுகல் – குறள்: 602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.        – குறள்: 602

                      – அதிகாரம்: மடி இன்மை, பால்: பொருள்

கலைஞர் உரை

குலம்   சிறக்க  வேண்டுமானால், சோம்பலை  ஒழித்து,  ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தாம்பிறந்த குடியை மேன்மேலுயரும் நற் குடியாகச்செய்தலை விரும்புவர், முயற்சியின்மையில் முயற்சியின்மை கொண்டு ஒழுகுக.

மு. வரதராசனார் உரை

தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.

G.U. Pope’s Translation

Let indolence, the death of effort, die,
If you’d uphold your household’s dignity.

– Thirukkural: 602, Unsluggishness, Wealth