குருவிரொட்டி இணைய இதழ்

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து – குறள்: 687

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
– குறள்: 687

– அதிகாரம்: தூது, பால்: பொருள்



கலைஞர் உரை

ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும்
இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

வேற்றரசரிடம் தான் நடந்து கொள்ளவேண்டிய முறைமையை அறிந்து; அவரை நல்ல மனநிலையிற் காணுதற் கேற்ற சமையம் பார்த்து; தான் வந்த செய்தியைச் சொல்லுதற்கேற்ற இடமும் அறிந்து; தான் சொல்ல வேண்டியவற்றை முன்னமே தன் மனத்தில் ஒழுங்காக எண்ணிவைத்து;அவ்வாறு சொல்பவன் தலையாய தூதனாவான்.



மு. வரதராசனார் உரை

தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தை எதிர்நோக்கித் தக்க இடத்தையும் அறிந்து ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.



G.U. Pope’s Translation

He is the best who knows what’s due, the time considered well, The place selects, then ponders long ere he his errand tell.

 – Thirukkural: 687, The Envoy, Wealth



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link