குருவிரொட்டி இணைய இதழ்

அன்போடு இயைந்த வழக்குஎன்ப – குறள்: 73


அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. – குறள்: 73

– அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடு பொருந்திய தொடர்பை; அன்பு செய்தற்கு ஏற்பட்ட நெறியின் பயன் என்று கூறுவர் அறிவுடையோர்.



மு. வரதராசனார் உரை

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.



G.U. Pope’s Translation

Of precious soul with body’s flesh and bone,
The union yields one fruit, the life of love alone.

 – Thirukkural: 73, The Possession of Love, Virtues