குருவிரொட்டி இணைய இதழ்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது

tholkappiyam-sirappu-payiram-panaparanar-2
FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
வடவேங்கடம் தென்குமரி
- தொல்காப்பியம் - சிறப்புப்பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் பற்றிய சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது


வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே.

பனம்பாரனார் பாடியது

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link