குருவிரொட்டி இணைய இதழ்

ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது? Why is River Water Not Salty?

ஏன் உப்பை எடுத்துச் செல்லும் ஆற்று நீரில் உப்பு இல்லை, ஆனால் கடல் நீரில் மட்டும் உப்பு உள்ளது? Why is River Water Not Salty?

ஆற்று வெள்ளம் கடலுக்கு உப்பை அடித்துக் கொண்டு சென்று கடலில் சேர்க்கிறது. அதனால் கடல் நீர் உப்பாக உள்ளது என்பது பற்றி இதற்கு முன் ஏன்? ஏப்படி? பகுதியில் பார்த்தோம். சரி. உப்பைக் கொண்டு செல்லும் ஆற்று நீர் ஏன் உப்பாக இருப்பதில்லை? கடல் நீர் மட்டும் ஏன் உப்பாக உள்ளது?

  1. ஆற்றில் நீர் நிரந்தரமாக தேக்கி வைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறை மழை வெள்ளத்துடன் கலந்து வரும் உப்புகள் மற்றும் தாதுக்கள் (Salts and Minerals), ஆற்றில் இருந்து மொத்தமாக கடலுக்கு புது வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனால் ஆற்றில் உப்பு தங்குவதில்லை. அதனால் தான் ஆற்று நீர் தெளிவாக உப்பின்றி தூய்மையாக இருக்கிறது.
  2. வேகமாக செல்லும் ஆற்று நீரின் அளவு அதிகமாக இருப்பதாலும், அதில் கரைந்துள்ள உப்பின் அளவு நீரின் அளவை ஒப்பிடும்போது, மிகக் குறைவான அளவாக இருப்பதாலும், ஆற்று நீரை எடுத்து நாம் சுவைத்தால் உவர்ப்பாக இருக்காது. ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக கடலில் சென்று, தொடர்ச்சியாக, நீண்ட காலமாக சேமித்து வைக்கப்படும் போது கடல் நீரின், உப்புத் தன்மை அதிகரிக்கிறது.

ஆகவே, கடல் நீர் உப்பை நிரந்தரமாகத் தேக்கி வைக்கும் இறுதி இடமாக இருப்பதாலும், கடலில் நீர் வெளியேறிச் செல்லும் போக்கி (Outlet) இல்லாததாலும், கடல் நீர் மட்டும் என்றும் உப்பாக இருக்கிறது.