குருவிரொட்டி இணைய இதழ்

அறிவியல் அறிஞர்களின் கூற்றுகள் – Quotes from Scientists

இந்தப்பகுதியில் அறிவியல் அறிஞர்களின் புகழ்பெற்ற கூற்றுகள் (Quotes from Scientists) கொடுக்கப்பட்டுள்ள. மேலும் பல கூற்றுகள் தொடர்ந்து சேர்க்கப்படும்.


அறிவியல் மிகவும் அழகானது என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவர்.

– மேரி க்யூரி



எனது படிப்பை மீண்டும் தொடங்குவதாக இருந்தால், பிளாட்டோவின் அறிவுரைப்படி, கணிதத்திலிருந்து தொடங்குவேன்.

– கலிலியோ கலிலி


ஒரு மணி நேரத்தை வீணாக்கத் துணிந்தவன், வாழ்க்கையின் மதிப்பைக் கண்டறியாதவன்.

– சார்லஸ் டார்வின்

நம் முயற்சியைக் கைவிடுவதுதான் நம் மிகப்பெரிய பலவீனம். மேலும் ஒரு முறை முயற்சி செய்வதே வெற்றி பெறுவதற்கு மிகச்சரியான வழி.

– தாமஸ் ஆல்வா எடிசன்

(தன் முயற்சியில்) ஒரு தவறுகூட செய்யாத ஒருவன், எந்த முயற்சியும் புதிதாக செய்யவில்லை என்று பொருள்.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நமக்குத் திறனுள்ள அனைத்துச் செயல்களையும் நாம் செய்து முடித்தால், நம்மை நாமே வியப்பில் ஆழ்த்திக்கொள்ள முடியும்!

– தாமஸ் ஆல்வா எடிசன்


நான் தோற்கவில்லை! முயற்சி வேலை செய்யாத 10,000 வழிகளைத் தெரிந்து கொண்டேன்!

– தாமஸ் ஆல்வா எடிசன்

உன் மதிப்பு, உன்னிடம் என்ன இருக்கிறது என்பதைப் பொருத்ததல்ல; நீ என்னவாக இருக்கிறதாய் என்பதைப் பொருத்தது.

– தாமஸ் ஆல்வா எடிசன்

அறிவின் ஒரே மூலம் பட்டறிவு (அனுபவம்) மட்டுமே.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

கற்பனை என்பது அறிவை விட முக்கியமானது.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

இயற்கையைக் கூர்ந்து பார். எல்லாவற்றையும் நன்றாக புரிந்து கொள்வாய்.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அறிவாளிகள் சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறார்கள்; மேதைகள் சிக்கல்களைத் தடுக்கிறார்கள்.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எல்லா பொதுமைபடுத்தல்களும் தவறானவை. இந்தக் கூற்றையும் சேர்த்து.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்



பெருமை (சிறப்பு) என்பது வழக்கமான ஒன்றை வழக்கத்திற்கு மாறான வழியில் செய்வதால் வந்தடைவதே ஆகும்.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நான் செய்ய விரும்பும் வேலை இன்னும் நிறைய இருக்கிறது. நேரத்தை வீணாக்குவது எனக்குப் பிடிக்காது.

– ஸ்டீஃபன் ஹாக்கிங்

அறிவுத்திறனின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல. கற்பனைத்திறனே!

– ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

நான் இன்னும் வளராமல் குழந்தையாகவே இருக்கிறேன். எப்போதும் “எப்படி? ஏன்?” என்னும் கேள்விகளைக்கொண்டு இருக்கிறேன். ஆனால், எப்போதாவதுதான் எனக்கு விடை கிடைக்கிறது.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

யாரும் பரிசு பெறும் நோக்கத்துடன் இயற்பியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை. அது வேறு யாரும் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்றை கண்டறிவதில் ஏற்படும் மகிழ்சிக்காக மட்டுமே.

– ஸ்டீஃபன் ஹாக்கிங்

என்னால் விண்வெளியில் உள்ள கோள்களின் இயக்கத்தைக் கணக்கிட முடியும். ஆனால், மக்களின் மடமையைக் கணக்கிட முடியாது.

– ஐசக் நியூட்டன்