குருவிரொட்டி இணைய இதழ்

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் – குறள்: 1006


ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று
ஈதல் இயல்பு இலாதான்.
குறள்: 1006

– அதிகாரம்: நன்றியில் செல்வம், பால்: பொருள்



கலைஞர் உரை

தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும்
இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத்
தொற்றிக்கொண்ட நோயாவான்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனாய்; அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; அவ்விரண்டுஞ் செய்தற் கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன்.



மு. வரதராசனார் உரை

தானும் நுகராமல் தக்கவர்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.



G.U. Pope’s Translation

Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themseleves enjoy, and nought to worthy men inpart.

 – Thirukkural: 1006, Wealth without Benefaction, Wealth