குருவிரொட்டி இணைய இதழ்

வினைக்கண் வினையுடையான் கேண்மை – குறள்: 519


வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு.
– குறள்: 519

அதிகாரம்: தெரிந்து வினையாடல், பால்: பொருள்



கலைஞர் உரை

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வினையை முழுநேரமும் முழுமுயற்சியுடன் செய்து வருபவன் அவ்வுரிமை பற்றி அரசனொடு உறவுபோல் ஒழுகுவதை; பொறாமைக்காரர் கோட்சொல்லைக்கேட்டு அரசன் வேறுபடக் கருதுவானாயின் , திருமகள் அவனைவிட்டு நீங்குவாள்.



மு. வரதராசனார் உரை

மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.



G.U. Pope’s Translation

Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his toils who share.

 – Thirukkural: 519, Selection and Employment, Wealth