குருவிரொட்டி இணைய இதழ்

வாய்மை எனப்படுவது யாதெனின் – குறள்: 291


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
– குறள்: 291

– அதிகாரம்: வாய்மை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறருக்கு எள் முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.



ஞா. தேவநேயப் பாவாணர்

மெய்ம்மையென்று சொல்லப்படுவது யாதென்று வினவின்; அது எவ்வகை உயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் எட்டுணையும் விளைக்காத சொற்களைச் சொல்லுதலாம்.



மு.வரதராசனார் உரை

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.



G.U. Pope’s Translation

You ask, in lips of men what ‘truth’ may be;
‘Tis speech from every taint of evil free.

– Thirukkural: 291, Veracity, Virtues