குருவிரொட்டி இணைய இதழ்

உண்ணாது நோற்பார் பெரியர் – குறள்: 160

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

– குறள்: 160

– அதிகாரம்: பொறை உடைமை, பால்: அறம்



கலைஞர் உரை

பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நோன்பினால் உணவைத் தவிர்ந்து பசியையும் தட்ப வெப்பத்தையும் பொறுத்துக் கொள்ளும் துறவியர் மக்கட்குட் பெரியவரே; ஆயின் அவர் பெரியவராவது பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் இல்லறத்தார்க்கு அடுத்தபடியே.



மு. வரதராசனார் உரை

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.



G.U. Pope’s Translation

Though ‘great’ we deem the men that fast and suffer pain, Who others’ bitter words endure, the foremost place obtain.

 – Thirukkural: 160, The Possession of Patience, Forbearance, Virtues

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link