குருவிரொட்டி இணைய இதழ்

உண்ணற்க கள்ளை உணில்உண்க – குறள்: 922


உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
குறள்: 922

– அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள்.



கலைஞர் உரை

மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற
விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உயிரையும் மதிப்பையுங் காத்துக் கொள்ள விரும்புபவர் கள்ளை உண்ணாதிருக்க;அங்ஙனமன்றி உண்ணவே விரும்பின், அறிவுடையோரால் மக்களாகக் கருதப்படுதலை விரும்பாதவர் உண்க.



மு. வரதராசனார் உரை

கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.



G.U. Pope’s Translation

Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks by drinking, all good men’s esteem is lost.

Thirukkural: 922, Not Drinking Palm – Wine, Wealth.