குருவிரொட்டி இணைய இதழ்

துப்புரவு இல்லார் துவரத் – குறள்: 1050


துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. – குறள்: 1050

– அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள்



கலைஞர் உரை

ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்; பிறர் மனைகளிலுள்ள உப்பையும் புளித்த பழங்கஞ்சியையும் உண்டொழித்தற்கேயாம்.



மு. வரதராசனார் உரை

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.



G.U. Pope’s Translation

Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour’s salt and vinegar to die.

 – Thirukkural: 1050, Poverty, Wealth