குருவிரொட்டி இணைய இதழ்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி – குறள்: 12

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.                      – குறள்: 12

        – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம்


கலைஞர் உரை

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.


ஞா. தேவநேயப் பாவாணர் உரை

உண்பார்க்கு நல்ல வுணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்பவர்க்குத் தானும் உணவாவது மழையே.


மு. வரதராசனார் உரை

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.


G.U. Pope’s Translation

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

 – Thirukkural: 12,The Excellence of Rain, Virtues