குருவிரொட்டி இணைய இதழ்

தீவினையார் அஞ்சார் விழுமியார் – குறள்: 201


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. – குறள்: 201

– அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம்



கலைஞர் உரை

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.



மு. வரதராசனார் உரை

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார் தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.



G.U. Pope’s Translation

With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin.

 – Thirukkural: 201, Dread of Evil Deed, Virtues