குருவிரொட்டி இணைய இதழ்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது – குறள்: 251


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். – குறள்: 251

– அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம்



கலைஞர் உரை

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.



மு. வரதராசனார் உரை

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?



G.U. Pope’s Translation

How can the wont of ‘kindly grace’ to him be known,
Who other creatures’ flesh consumes to feed his own?

 – Thirukkural: 251, The Renunciation of Flesh, Virtues