குருவிரொட்டி இணைய இதழ்

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – குறள்: 597

FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link
Thiruvalluvar

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பா டுஊன்றும் களிறு. – குறள்: 597

– அதிகாரம்: ஊக்கம் உடைமை, பால்: பொருட்பால்



கலைஞர் உரை

உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோல, ஊக்கமுடையவர்கள், அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

போர்யானை தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினாற் புண்பட்ட விடத்துந் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும்; அதுபோல ஊக்க முடையோர் தாம் கருதிய வெற்றிக்குத் தடையாகத் துன்பம் நேர்ந்தவிடத்தும் தளராது தம் பெருமையை நிலைநாட்டுவர்.



மு. வரதராசனார் உரை

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.



G.U. Pope’s Translation

The men of lofty mind quail not in ruin’s fateful hour, The elephant retains his dignity mind arrow’s deadly shower.

 – Thirukkural: 597, Energy, Virtues



FacebookFacebook MessengerWhatsAppTwitterRedditGmailYahoo MailCopy Link