குருவிரொட்டி இணைய இதழ்

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் – குறள்: 319


பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
– குறள்: 319

– அதிகாரம்: இன்ன செய்யாமை, பால்: அறம்



கலைஞர் உரை

பிறருக்குத் தீங்கு விளைத்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

ஒருவர் பிறர்க்குத் தீயவற்றை ஒரு பகலின் முற்பகுதியிற் செய்வாராயின், அதன் விளைவாகத் தமக்குத் தீயவை அப்பகலின் பிற்பகுதியில் அவர் செய்யாமல் தாமே வரும்.



மு. வரதராசனார் உரை

முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.



G.U. Pope’s Translation

If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.

– Thirukkural: 319, Not doing Evil, Virtues