குருவிரொட்டி இணைய இதழ்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை – குறள்: 805


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.
– குறள்: 805

– அதிகாரம்: பழைமை, பால்: பொருள்



கலைஞர் உரை

வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது
அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.



ஞா. தேவநேயப் பாவாணர் உரை

நட்டார் நோதக்க செயின் பழைமையான நண்பர் தாம் வருந்தத்தக்கவற்றைச் செய்தாராயின், அதற்குக் கரணியம் அவரது அறியாமை மட்டுமன்றி அவர் கொண்ட பேரூரிமையுமாகும் என்று அறிந்து பொறுத்துக்கொள்க.



மு. வரதராசனார் உரை

வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம், அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.



G.U. Pope’s Translation

Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.

Thirukkural: 805, Familiarity, Wealth